ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
இந்த வரிசையில் நிச்சயம் மேலும் ஒரு புதிய இணையதளம் உற்சாகத்தை தராது என்ற போதிலும் பவுன்சர் தளத்தை அப்படி அலட்சியப்படுத்தி விட முடியாது.காரணம் இமெயில் தடுப்பில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிறது.
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று இமெயிலை உருவாக்கித்தாராமல் உங்கள் இமெயில் முகவரியையே மாற்றித்தருகிரது.அதாவது பிட்.லே போன்ற இமெயில் சுருக்க சேவையை போல இதுவும் இமெயில் முகவரியை சுருக்கி தருகிறது.
இதற்காக இந்த தளத்தில் இமெயில் முகவரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது.தேவைப்பட்டால் இந்த முகவ்ரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
அதன் பிறகு எந்த தளத்தில் இமெயில் முகவரியை சமர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
பதில் மெயில்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும்.ஆனால் உங்கள் உண்மையான இமெயில் முகவரி யாருக்கும் தெரியாது.பாதுகாப்பாகவே இருக்கும்.
இந்த தளம் சுருக்கப்பட்ட இமெயில் முகவரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
சுவாரஸ்யமான பயனுள்ள சேவை.
இமெயில் முகவரியை பெற;http://boun.cr/
No comments:
Post a Comment