1,மாங்காய் புளிப்பாக இருந்தால் மாங்காய்த் துண்டுகளைச் சுண்ணாம்புத் தண்ணீர் விட்டுக் கழுவினால் புளிப்பு குறையும்.
2,குளிர் காலங்களில் தயிர் புளிக்க ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரைத்தூள் போட்டு புரையூற்றி வெதுவெதுப்பான இடத்தில் வைக்கலாம்.
3,கொய்யா மர இலைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பலகாரம் செய்யத் துவங்கும் முன் ஒருமுறை போட்டு எடுத்து விட்டால் எண்ணெய் வாணலியிலிருந்து பொங்கி வழியாது.
4,வீட்டில் துர்வாசனை இருந்தால் அகலமான பாத்திரத்தில் வினிகரை சிறிது ஊற்றி திறந்து வைத்தால் துர்வாசனை போய்விடும்.
5,வார்னீஷ் செய்த பர்னிச்சர்களில் அழுக்கு இருந்தால் பருத்தித் துணியை தேயிலை நீரில் முக்கி அதைக் கொண்டு துடைத்தெடுக்கலாம்.
6,டேபிளில் பழச்சாறு கொட்டிக் கறை ஏற்பட்டிருந்தால் மண்ணெண்ணெய் பயன்படுத்தித் துடைத்தால் கறை நீங்கி விடும்.
7,வெள்ளிப் பொருட்களை பற்பசையை வைத்துச் சுத்தப்படுத்தினால் பளபளக்கும்.
8,சப்பாத்திக்கு மாவு பிசையும் போது மைதா அல்லது கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கடலை மாவு கலந்து பிசைந்தால் சப்பாத்தி ருசியாக இருக்கும்.
9,தேங்காய்ப் பாலை இரவில் தலையில் தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் சீயக்காய்த்தூள் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது.
10,இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தினசரி வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் அந்நோய் குறையும்.
No comments:
Post a Comment