தொடர்ந்து பல மணிநேரம் படிப்பது எப்படி?
ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். 4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில், நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் அது உடலளவிலும், மனதளவிலும் ஒருவித சில பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அதாவது மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து, உடலையும்,மனதையும் ரிலாக்சாக மாற்றலாம்.
மேலும் சிறிதுநேரம் கண்களை மூடி அமரலாம். சில சமயங்களில் லேசான மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். இடைவெளி சமயங்களில் நீர் அருந்தலாம். ஏதேனும் ஜூஸ் அல்லது தேநீர் கூட அருந்தலாம். ஒரே பாடத்தை படிக்காமல், பாடங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். இதுபோன்ற செயல்முறையில் ஈடுபடும்போது, மனமும், உடலும் சுறுசுறுப்பாகி 4மணிநேரம் என்பது, 5 அல்லது 6 மணிநேரமாகவும் அதிகரித்து மாணவர்களைன் கல்வித்தரம் மேம்படும்.
நினைவுத் திறனை அதிகப்படுத்தி பேணி பாதுகாக்க சில வழிகள்...
உடல் தசைகளை உறுதியாக பராமரிப்பது போல்,நம்முடைய எண்ணங்களையும் நினைவுகளையும் நினைவில் வைப்பதற்கான திறன்களை அதிகரித்து அதை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்கான வழிகளில் சில....
* உங்கள் தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். நீங்கள் போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் அது ஞாபகமறதியை ஏற்படுத்தும்.
* ஞாபகமறதி உள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள்.
* புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள்,ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள் போன்றவற்றை குறிப்பிட்ட கருவிகள், வார்த்தைகள்,வாக்கியங்களில் உள்ள மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் பாடத்தில் உள்ள படங்கள், சார்டுகள்,கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன் உள்ள எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றின் வாயிலாக எளிய முறையில் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
* உங்களுடைய நினைவுத்திறனை கூர்மையாக்கும் அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகள் நம்முடைய மூளையை கூர்மையாக்கும்.
* ஒரு குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள்.
* உங்கள் தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். நீங்கள் போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் அது ஞாபகமறதியை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment