ஆங்கில மொழி கற்பதற்கு எங்கே செல்ல வேண்டும் , பல இணையதளங்கள் சாம்பிள் என்று சொல்லிவிட்டு சேர்ந்த பின் பணம் வசூலிக்கின்றனர், ஆனால் அப்படி எந்த பணமும் வசூலிக்காமல் ஆன்லைன் மூலம் நாம் எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி கற்கலாம் என்றால் சராசரியக 5 மொழிகள் அல்லது 10 மொழிகள் துணை செய்யும் வண்ணம் இருக்கும் ஆனால் ஆன்லைன் மூலம் 60 -க்கும் மேற்பட்ட மொழியில் எந்த மொழியில் இருந்து எந்த மொழி வேண்டுமானாலும் எளிதாக சில நாட்களில் கற்கலாம்.
இணையதள முகவரி : http://www.pronunciator.com/Tamil/
இத்தளத்திற்கு சென்று I speak என்பதில் நீங்கள் எந்த மொழி பேசுபவர் என்பதை தேர்ந்தெடுக்கவும் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகிறீர்களோ அந்த மொழியை தேர்ந்தெடுக்கவும் அடுத்து இருக்கும் கட்டத்திற்குக்ள் I want to learn என்பதில் எந்த மொழி கற்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வளவு தான் இனி ஒவ்வொரு படியாக இலக்கணம் முதல் எப்படி எல்லாம் ஒரு மொழி கற்க வேண்டும் என்பதை வார்த்தை வார்த்தைகளாக அழகாக சொல்லி கொடுக்கிறது, முதலிலே அறிவித்து விடுகின்றனர் நாங்கள் எந்த காசும் வசூலிப்பதில்லை எல்லாம் இலவச சேவை தான் என்று அதானால் நாம் துணிந்து எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம். 3 மில்லியன் பாடங்கள் உள்ளது, சில மாதங்கள் முறையாக நாம் இத்தளத்தின் மூலம் எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம். வெளிநாட்டு மொழிகள் சொல்லித்தருகிறோம் என்று அசத்தலான விளம்பரம் கொடுக்கும் பல தளங்கள் கூட இதே தகவலைத்தான் மாற்றி வெளியிடுகின்றனர், உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள் உங்கள் பெயர் சொல்லி அவரும் புது மொழி கற்கலாம்.
No comments:
Post a Comment