DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, December 30, 2012

நீங்களும் ரீமிக்ஸ் செய்யலாம்


பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.
இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.
இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.
இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் மாஷ்ரூம் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
மாஷ்ரூமில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த பாடலில் யூடியூப் கோப்பை பதிவேற்றுவது மட்டும் தான்.இதற்கும் கூட கஷ்டப்பட வேண்டாம்.பாடலில் யூடியூப் முகவரியை சமர்பித்தாலே போதும்.
அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.இப்பைட் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டு ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://mashroom.fm/

ஆய்வு செய்திகளை கண்டுபிடித்து தரும் தளம்


தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் பெயரில் பிரவுசர் இருந்தாலும் இது இன்னொரு பிரவுசர் அல்ல!
ஒரு விதத்தில் இது வலைவாசல் இன்னொரு விதத்தில் தேடியந்திரம்.அல்லது இரண்டும் இணைந்த தளம் என்றும் சொல்லலாம்.
இந்த தளமோ தன்னை ஆய்வு தகவலுக்கான கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வர்ணித்து கொள்கிறது.அதாவது ஆய்வு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் இந்த தளம் கண்டு பிடித்து தருகிறது.
ஆய்வு தகவல்களை தனியே தேட வேண்டிய அவசியமே இல்லை.ஆய்வுலகின் சமீபத்திய செய்திகளை முகப்பு பக்கத்திலேயே இது பட்டியலிடுகிறது.
ஆய்வுலக செய்திகள் என்றால் ஆய்வு அல்லது கருத்து கணிப்பு அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை மையமாக கொண்டவை.
உதாரணத்திற்கு அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியுயார்க் டைமிசின் அச்சு பிரதிக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையை விட இணைய பதிப்பிற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற தகவலோ அல்லது அமெரிகாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளில் 70 % பேர் ஏதாவது ஒரு வர்த்தக நிறுவன பிராண்டை விரும்பியுள்ளனர் என்ற தகவலோ ஆய்வின் அடிப்படையில் பெறப்பட்டவை.
அதே போல சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவில் கழிவறை வசதி உள்ளவர்களை விட செல்போன் வைத்திருப்பவர்களே அதிகம் என்று தெரிவித்தது.
இத்தகைய ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமான தகவல்களை அளிக்க கூடயவை மட்டும் அல்ல புதிய புரிதலை ஏற்படுத்த வல்லவை.பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் இத்தகைய ஆய்வு சார்ந்த செய்திகளை தவறாமல் பார்க்கலாம்.
 செய்திகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் இந்த செய்திகள் கவனிக்கப்படாமலே போகும் வாய்ப்பும் இருக்கிறது.மாறாக இந்த வகை செய்திகள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ?அதை தான் ஃபேக்ட் பிரவுசர் செய்கிறது.
ஆய்வுகள்,கருத்து கணிப்புகள்,அறிக்கைகள்,சர்வேக்கள் ஆகியவற்றை அடிப்படையாக  கொண்ட செய்திகளை இது தேடிப்பிடித்து பட்டியலிடுகிறது.எனவெ ஆய்வு முடிவுகளுக்காக அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் அவற்றை படித்து கொள்ளலாம்

வீடியோ வாக்கெடுப்பு நடத்த ஒரு தளம்


யூடியூப் ,வீடியோ பகிர்வு தளம் என்பது பொதுவான அறிமுகம்.
பயனாளிகளுக்கோ அது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அவதாரம் எடுக்க கூடியது.நகைச்சுவை பிரியர்களை கேட்டால் யூடியூப்பில் சிரிக்க வைக்கும் வீடியோக்களை பார்க்கலாம் என்பார்கள்.இசை பிரியர்களை கேட்டால் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம் என்பார்கள்.(தமிழ் பாடல்களுக்கும் குறைவில்லை)திரைப்பட ரசிகர்களுக்கு,விளையாட்டு பிரியர்களுக்கு என்று ஒவ்வொருவருக்கும் யூடியூப் ஒரு அர்த்ததை தரக்கூடியது.கல்வி வீடியோக்களை கவனத்தோடு பார்த்து ரசிப்பவர்களும் இருக்கின்ற‌னர்.
இசை பிரியர்களை பொருத்தவரை யூடியூப்பில் கேட்டு ரசிக்கும் பாடல்களை பட்டியல் போடும் வசதியும் இருக்கிறது.அதாவது பிளேலிஸ்ட் தயாரிப்பது.
இப்படி பாடல் பட்டியலை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
பாடல் பட்டியல் தயாரிப்பது அதனை பகிர்ந்து கொள்வது பெரிய விஷயமல்ல;ஆனால் நண்பர்களோடு சேர்ந்து பாடல் பட்டியலை கூட்டாக தயாரிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?பூம்பாக்ஸ் தளம் அந்த வசதியை தான் தருகிறது.
இசையிலும் பாடலிலும் ஆர்வம் கொண்டவ‌ர்கள் இந்த தளத்தை பார்த்தால் சொக்கி போய்விடுவார்கள்.
இளையராஜாவின் பத்து சிறந்த பாடல்கள்,பாரதியாரின் திரை இசை பாடல்கள் என எந்த கருத்தின் அடிப்படையிலும் பாடல் பட்டியலை தயாரிக்கலாம்.
யார் வேண்டுமானாலும் இத்தகைய பட்டியலை தனியே உருவாக்கி விடலாம் தான்.அது தனிப்பட்ட ரசனையின் வெளிப்பாடாக இருக்கும்.ஆனால் இந்த பட்டியலையே நண்பர்கள் பங்களிப்போடு உருவாக்கினால் அது வேறு விதமாக தானே இருக்கும்.
அதை தான் இந்த தளம் சாத்திய‌மாக்குகிறது.நீங்கள் எந்த பட்டியலை உருவாக்க விரும்புகிறீர்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் அளித்து ,அது தொடர்பாக நண்பர்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களையும் குறிப்பிட்டு மாதிரிக்கு ஒரு பாடல் வீடியோவை இணைத்து கொள்ளலாம்.இவை எல்லாம் அழகான விண்ணப்ப படிவம் போல ஒரு பக்கத்தில் வழங்க‌ப்படுகிற‌து.
இந்த பக்கத்தை தயார் செய்ததும் அதற்கான இணைய முகவரியை நண்பர்களோடு ப‌கிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் அதனை படித்து விட்டு தங்கள் பங்கிற்கு வீடியோவை சம‌ர்பித்தால் அவற்றை கொண்டு பன்முகத்தன்மை கொண்ட ஒரு பாடல் பட்டியல் உருவாகி நிற்கும்.அந்த பட்டிய‌லையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் பாடல்களின் பட்டிய்லை உருவாக்கி கொள்வதற்கான சேவை என்றாலும் இதனை மேலும் பல விதங்களில் பயன்படுத்த முடியும்.
மிகச்சிறந்த நகைச்சுவை வீடியோக்களை பட்டியலிட இதனை பயன்படுத்தலாம்.பார்க்க வேண்டிய படத்தை தீர்மானிப்பதற்கு முன் ப‌டங்களின் முன்னோட்டத்தை பட்டியலாக சம‌ர்பிக்க சொல்லலாம்.பார்க்க வேண்டிய இட‌ங்களை வீடியோவாக பரிந்துரைக்க சொல்லி அதன்டைப்படையில் சுற்றுலா இடத்தை தேர்வு செய்யலாம்.
இதை வீடியோ வாக்கெடுப்பாக கருதலாம் .இந்த வாக்கெடுப்பு வசதியை கொண்டு இந்த தளத்தை மேலும் புதுவிதமாக பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி;http://www.b00mbox.com/bb_main.php

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம்

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? 

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

Saturday, December 29, 2012

டைப் செய்ய கற்றுக் கொள்ள உதவும் தளம்


டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய கற்று கொள்ளுங்கள் என சொல்லப்படுவதையே அவமானமாக கருதலாம்.சிலர் இத்தகைய பயிற்சி தேவையில்லை என்று கருதலாம்.
ஆனால் யாராக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொடுக்கும் லெட்டர் பபில் இணையதளத்தை பார்த்தால் கொஞ்சம் சொக்கிப்போய் விடுவார்கள்.
எதையும் விளையாட்டாக செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா!இந்த தளமும் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது.அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் எளிமையான கம்ப்யூட்டர் விளையாட்டு பக்கம் போலவே தோன்றுகிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே டைப் செய்யும் விளையாட்டுக்கான வழிமுறையும் விளையாட்டு நிலைகளும் தோன்றுகின்றன.அவற்றில் விரும்பியதை தேர்வு செய்தால் திரையில் கண்ணாடி குமிழ்கள் தோன்றி கொண்டே இருக்கும் .குமிழ்களில் தோன்றும் ஆங்கில எழுத்துக்களை பார்த்து அவற்றுக்கான விசையை அழுத்த வேண்டும்.கண்ணாடி குமிழ்கள் தோன்ற தோன்ற அவற்றுக்கான விசையை தேடி அழுத்த வேண்டும்.
சரியான விசையை அழுத்துவதற்கு ஏற்ப ஒவ்வொரு நிலையாக முன்னேறி கொண்டே இருக்கலாம்.ஒவ்வொரு நிலையிலும் எழுத்துக்களின் சவால் கூடிக்கொண்டே போவது சுவாரஸ்யம்.
இவ்வாறு மூன்று கட்டங்களின் விளையாட்டுக்கள் அதாவது பயிற்சி இருக்கின்றன.திறமைக்கேற்ப ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
விளையாட்டாக இருப்பதால் எவருக்குமே முயன்று பார்க்கலாமே என்று தோன்றும்.குமிழ்களை பார்க்கும் போது ஒருவித சவாலாகவே தோன்றும்.இந்த இரண்டும் இணைந்து விளையாட்டில் மூழ்க வைக்கும்.அப்படியே டைப் செய்வதில் வேகத்தையும் விவேகத்தையும்(பிழையின்றி டைப் செய்வது) ஏற்படுத்தி தரும்.
டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களோ இதில் ஒரு வித லயிப்போடு பயிற்சியில் ஈடுபடலாம்.
உறுப்பினராகும் வசதியும் இருக்கிறது.உறுப்பினராகமாலேயே டைப் செய்யும் வசதியும் இருக்கிறது.ஆனால் உறுப்பினரானால் பல சிறப்பம்சங்களை அனுபவிக்கலாம்.அதாவது டைப் செய்வதில் ஒருவரது முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.நண்பர்களை அழைத்து அவர்களோடு போட்டி போடலாம்.
டைப் செய்ய கற்று கொள்வது இத்த்னை சுவாரஸ்யமானதா என்னும் வியப்பை ஏற்படுத்தி கூடவே டைப் செய்யும் திறனையும் மேம்படுத்தும் இணையதளம்.
இணையதள முகவரி;http://www.letterbubbles.com/

இலக்கை அடைய ஒரு இணையதளம்


வழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இலக்காக உங்கள் கனவினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது.
எல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை அடைய வேண்டும் என்ற இலக்கும் இருக்கும்.ஆனால் இலக்கை அடைவதற்கான வேட்கையும் தீவிரமும் தான் நபருக்கு நபர் மாறுபடும்.பலர் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் செய்யாமல் தள்ளிப்போட்டு விடுவார்கள்.சிலருக்கு செய்து முடிப்பதற்கான ஊக்கம் இல்லாமல் போகலாம்.
நினைத்தை எல்லாம் அடைவதற்கான வழி என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை குறித்து வைத்து கொளவது நல்ல வழி.இதற்காக என்றே செய்து முடிக்க விரும்பும் விஷயங்களை படிட்டியலிட்டு கொள்ள உதவும் இணைய குறிப்பேடு தளங்கள் பல இருக்கின்றன.

மருத்துவ குணம் கொண்ட சில பொருட்கள்


உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். 
அவைஉணவுக்கு வாசனை மட்டுமல்லாமல்உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களைதற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும்அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்துஇந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
பட்டைசெரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடுதிசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்புமூட்டு வலிமாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும்பல்சொத்தை,ஈறுகளில் வலிசிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

கல்வித்தரம் மற்றும் நினைவுத்திறன் மேம்பட


தொடர்ந்து பல மணிநேரம் படிப்பது எப்படி?

ஒரு மாணவர் ஒரு நாளில் மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமாபொதுவாக,பலராலும் இது இயலாத காரியம்.  4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில்நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் அது  உடலளவிலும்மனதளவிலும் ஒருவித சில பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அதாவது மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்துஅதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில்சில எளிமையான பயிற்சிகள் செய்துஉடலையும்,மனதையும் ரிலாக்சாக மாற்றலாம்.

Friday, December 28, 2012

வெளிநாட்டில் படிக்க விண்ணப்பங்களும்,விசா நடைமுறைகளும்


வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் ஆய்வு செய்ய விரும்புபவர்கள்அந்தந்த நாடுகளில் உள்ள கல்விச்சூழலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் கல்வி ஆண்டுகள் வெவ்வேறு விதமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்செமஸ்டர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கின்றன. விசா நடைமுறைகளும் வேறு வேறாக இருக்கின்றன. இவை குறித்த அடிப்படை அறிவைப் புரிந்து கொள்வதுவெளிநாடு சென்று பயில விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் சில நாடுகளில் உள்ள கல்வி சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விசா நடைமுறைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா
விண்ணப்பங்கள் சேர்க்கை துவங்குவதற்கு 12 முதல் 18 மாதங்களுக்கு முன்னரே வினியோகிக்கப்படும்.
பிப்ரவரி இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற போதும்ஆகஸ்ட்டில் இருந்து அக்டோபருக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விடவும். மார்ச் அல்லது மே இறுதிக்குள் நீங்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்த முடிவு வெளியாகி விடும். செப்டம்பர் - அக்டோபரில் கல்வியாண்டு துவங்கும்.

எந்தப் பாடத்தையும் எந்த நேரத்திலும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்த செலவுமே இல்லாமல் கற்க


ஓபன் மென்டார் (www.openmentor.netஎன்பது புரட்சிகரமானசெலவில்லாதஇணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும்எந்த நேரத்திலும்உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்அதே போல் கற்பிக்கலாம். 'யாவர்க்கும் இலவசக் கல்விஎன்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள்ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள்வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.


பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம்நேரம்செலவு,அலைச்சல் மிச்சமாகும்

நாம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்


  • மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.
  • கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
  • ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
  • ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு தளம்


விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்.
விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் போது கோபத்தை ஏற்படுத்தும் விளம்பரங்களை கடுமையாக விமர்சிக்க தோன்றும்.
ஆனால் விளம்பரங்கள் என்பது ஒரு வழி பாதையாயிற்றே,அதாவது விளம்பரங்களை பார்க்கவும் கேட்கவும் தானே முடியும் அவற்றுக்கு பதில் அளிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.விளம்பரங்களை விமர்சனம் செய்வது எப்படி சாத்தியம் என்று ஏக்கத்துடன் கேட்டால் அதற்கு ஒரு வழி, இணைய வழி இருக்கிறது.

புகைப்படத்தை திருத்த ஒரு இணையதளம்


புகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திருத்தித்தரும்  இணையதளம். 
மிக மிக எளிமையாக உள்ள இந்த தளம் எந்த ஒரு புகைப்படத்திலும் பொதுவாக மேற்கொள்ளக்கூடிய 12 திருத்தங்களை செய்து கொள்ள வழி செய்கிறது.12 அம்சங்களுமே முகப்பி பக்கத்திலேயே வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் கிளிக் செய்தால் புகைப்படத்தில் அந்த திருத்தத்தை மேற்கொண்டு விடலாம்.
புகைப்படத்தின் மீது வாசகங்களை இடம்பெற வைப்பது,புகைப்படத்தின் ஒரத்தை நிழல் போல் ஆக்குவது,அதன் முனைகளை வட்ட வடிவமாக்குவது,புகைப்படத்தை சுற்றி சதுரமாக கோட்டை போடுவது என பல்வேறு திருத்தங்களை மிக சுலபமாக செய்து கொள்ளலாம்.
அதே போல புகைப்படத்தை அச்சிட ஏற்ற வகையில் மாற்றுவது ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை கொலேஜ் போல ஒன்றிணைப்பது போன்ற விளைவுகளையும் மேற்கொள்ளலாம்.
புகைப்படத்தை டெஸ்க்டாப் நாட்காட்டியாக மாற்றிக்கொள்ள விரும்பினாலும் அதற்கான வசதி இருக்கிறது.
புகைப்படத்தின் அளைவை இஷ்டம் போல சுருக்கிகொள்ளும் வசதியும் இருக்கிறது.
ஒரே பக்கத்தில் புகைப்பட திருத்தங்கள் தொடர்பான 12 அம்சங்களை அணுக முடிவது இந்த தளத்தின் சிறப்பம்சம்.
இணையதள முகவரி;http://www.quickpicturetools.com/en/

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க ஒரு தளம்


இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்?
ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான்.
இப்படி இமெயிலில் புதைந்த பழைய புகைப்படங்களை தேடி எடுக்கும் எண்ணமோ தேவையோ ஏற்பட்டால் உதவுவதற்காக என்றே ஒரு இணையசேவை உருவாக்கப்பட்டுள்ளது.
லாஸ்ட்போட்டோஸ் என்னும் பெயரிலான அந்த சேவை இமெயில் தொலைந்த புகைப்படங்களை மீண்டும் தேடி எடுக்க உதவுகிறது.
வின்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை லாஸ்ட்போட்டோஸ் தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அனுமதித்தால் இந்த சேவை கடந்த கால இமெயில்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த புகைப்படங்களை எல்லாம் தேடி எடுத்து அழகாக தொகுத்து தந்து விடும்.
சில புகைப்படங்கள் அளவில் சின்னதாக  மட்டுமே இருக்கும்.அத்தகைய புகைப்படங்களை தேட வேண்டாம் என்று வடிக்கட்டச்சொல்லும் வசதியும் இருக்கிறது.அதே போல குறிப்பிட்ட வடிவிலான புகைப்பட கோப்புகள் தேவை இல்லை என்றோ குறிப்பிட்ட காலத்திற்கு முன் வந்த படங்கள் தேவை இல்லை என்றோ வடிக்கட்டிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போதோ அந்த படங்கள் உங்கள் டெஸ்க்டாப்பிலும் காண்பிக்கப்படும்.
அந்த படங்களை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சேவைகள் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கும் டிவிட்டரும் இப்போது தானே பிரபலமாகி இருக்கின்றன.பேஸ்புக் வருவதற்கு முன் இமெயிலில் தானே பெரும்பாலும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருப்போம்.அப்படி பகிர்ந்து கொண்டு மறந்து விட்ட படங்களை இப்போது தேடி எடுத்து பேஸ்புக்கில் பகிர்வது அருமையானது தானே.
இந்த புகைப்படங்கள் எல்லாம் உங்கள் டெஸ்க்டாப்பிலும் சேமித்து வைக்கப்படும்.அவற்றை அழகாக கோப்புகளில் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
ஜிமெயில் உட்பட பல்வேறு இமெயில் கணக்குகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இமெயிலில் அனுப்பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிறவ‌ர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.அதே போல புகைப்படங்கள் வாயிலாக கடந்த கால நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படஙக்ளை மீட்டெடுப்பதோடு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.
புகைப்படம் சார்ந்த சேவைகளில் மேலும் ஒரு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://lostphotosapp.com/

Thursday, December 27, 2012

வார்த்தைகளுக்கு கிராப் வடிவில் தகவல்கள் கொடுக்கும் தளம்


ஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் .
இணையதள முகவரி : http://graphwords.com
இத்தளத்திற்கு சென்று Draw thesaurus என்று இருக்கும் கட்டத்திற்குள் ஆங்கில சொற்களஞ்சியத்தில் இருந்து நாம் தேட விரும்பும் வார்த்தையை கொடுத்து Draw என்ற பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக வரும் திரையில் நாம் தேடிய வார்த்தையை ண்டு உருவாக்கப்பெற்ற மேப் அழகாக காட்டப்படும் இதில் இருந்து ஒவ்வொரு வார்த்த்தையும் சொடுக்கி அதிலிருந்து மேற்கொண்டு செல்லலாம், ஒவ்வொரு வார்த்தைகளையும் எளிதாக தேடுவதோடு மட்டுமல்லாமல் அதில் இருந்து கூடுதல் விபரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். 

அறிவை வளர்க்கும் 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்


விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம்  என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது .
பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது .
இணையதள முகவரி :http://www.nobelprize.org/educational/all_productions.html
நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும்  விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக  அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி :http://www.nobelprize.org/educational/all_productions.html

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு தளம்


புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது சோட்டர்.
இந்த தளம் புகைப்படங்கள் மீது விருப்பம் போல விளக்க குறிப்புகளை இடம் பெற வைக்க கைகொடுக்கிறது.
பொதுவாக விளக்க குறிப்புகளை புகைப்படத்தின் கீழே சில வரிகளாக இடம் பெற வைக்கலாம்.பத்திரிகைகளிலும் இணையத்திலும் இத்தகைய குறிப்புகளை தான் அதிகம் பார்க்கலாம்.
ஆனால் சோட்டர் புகைப்படத்தின் மீதே குறிப்பெழுத உதவுகிறது.அதிலும் புகைப்படத்தின் எந்த பகுதியையும் அழகாக சுட்டிக்காட்டி அதன் அருகே பொருத்தமான குறிப்புகளை இடம் பெறசெய்யலாம்.
எந்த புகைப்படத்திற்கு குறிப்புகள் தேவையோ அதனை இந்த தளத்தில் பதிவேற்றி பின்னர் அதில் தேவையான பகுதியை வட்டமிட்டொ அல்லது சதுர வடிவிலோ சுட்டிக்காட்டி அதில் குறிப்பெழுதலாம்.குறிப்பிட்ட இடத்தில் அம்பு குறியையும் தோன்றச்செய்யலாம்.
சுட்டிக்காட்டும் பகுதிக்கான வண்ணத்தையும் கூட நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.தேவை என்றால் புகைப்படம் மீதே வரையவும் செய்யலாம்.
புகைப்படத்திற்கான குறிப்புகளை பூர்த்தி செய்த பின் அதனை அப்படியே சேமித்து வைத்து கொள்வதோடு நண்பர்களோடு பேஸ்புக் டிவிட்டர் மூலம் பகிர்ந்தும் கொள்ளலாம்.
புகைப்படங்களை கூடுதல் தகவல்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வேற்று மொழிகளை கண்டறியவதற்கான தளம்


எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா?
இப்படி ஒரு அனுபவம் மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால் குழப்பம் அடைய வேண்டாம்.பாலிகிலாட் 300எ என்னும் இணையதளத்தின் பக்கம் சென்றீர்கள் என்றால் உங்கள் குழப்பம் தீர்ந்து விடும்.
காரணம் இந்த தளம் புரியாத எந்த மொழியின் சொற்களை சமர்பித்தாலும் அது எந்த மொழியை சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்லி விடுகிறது.அந்த வகையில் இந்த தளத்தை மொழி கண்டறியும் சேவை என்று வர்ணிக்கலாம்.
ஆனால் இந்த சேவையை பயன்படுத்த முதலில் இதனை கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் மொழியின் சொற்களை சமர்பித்தால் இந்த சாப்ட்வேர் அந்த மொழியை கண்டறிந்து சொல்லி விடுகிறது.
இவ்வாறு கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட மொழிகளை கண்டறியும் ஆற்றல் கொண்டதாக இந்த சாப்ட்வேர் அமைந்துள்ளது.சரியாக சொல்வதனால் மொத்தம் 474 மொழிகளுக்கான ஆற்றல் இதனிடம் உள்ளது.
எந்த மொழிகளை எல்லாம் கண்டறிய முடியும் என்பதற்கான நீளமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
மொழிகளின் நிலை குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த தளம் வழங்குகிறது.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 474 மொழிகளில் 110 மொழிகள் மட்டுமே பிரபலமானவையாக உள்ளன.அதாவது கணிசமான எண்ணிகை கொண்டவர்களால் பேசப்படுகின்றன.மற்ற மொழிகளில் குறைவான எண்ணிக்கையிலேயே பேசப்படுகின்றன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.
உதாரணத்திற்கு பிபில் என்றொரு மொழி இருக்கிறதாம்.1970 ம் ஆண்டு கணக்கு படி இந்த மொழியை பேசத்தெரிந்தவர்கள் 40 பேர் மட்டுமே இருந்தனராம்.இப்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டதாம்.
அதே போல யுகாகிர் என்னும் மொழி 170 பேரால் மட்டுமே பேசப்படுகிற‌தாம்.இந்த மொழியை பேசுபவர்கள் ர‌ஷ்யாவின் வட கிழக்கு பகுதில் உள்ள யுகாகிர் குடியரசில் வசிக்கின்றனர்.
இணையதள முகவரி;http://www.polyglot3000.com/

Wednesday, December 26, 2012

பெண்களுக்கான வேலை வாய்ப்பு இணையதளம்


நவுக்ரி டாட் காம் இணையதளம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்தியாவின் முதன்மையான வேலை வாய்ப்பு இணையதளம் அது.இணையத்தில் அந்த தளத்தை பார்த்திராதவர்கள் கூட அதன் அசத்தலான தொலைகாட்சி விளம்பர‌த்தை பார்த்து ரசித்திருக்கலாம்.
நவுக்ரி என்ற பெயரை சேர்த்து கொண்டு வேறு சில வேலை வாய்ப்பு இணையதளங்களூம் இருக்கின்றன.நவுக்ரி இந்தியா,நவுக்ரி ஹப்,நவுக்ரி கல்ப்,நவுக்ரி குரு என நவுக்ரியை உடன் சேர்த்து கொண்டுள்ள தளங்களுக்கு பெரிய பட்டியலே போடலாம்.
வேலை வாய்ப்பு தளங்களின் அடையாளமாக நவுக்ரி.காம் விளங்குவ‌கதால் இப்படி எல்லோரும் நவுக்ரியை ஒட்ட வைத்து கொண்டு விடுகின்றனர்.அதோடு நவுக்ரி என்னும் சொல்லுக்கு இந்தி மொழியில் வேலை என்ற பொருள் இருப்பதும் இத‌ற்கான‌ கார‌ண‌மாக‌ அமைந்துள்ளது. http://www.naukriforwomen.com/

புதுமையான கேள்வி பதில் தளம்


கேள்வி பதில் இணையதளங்கள் ஏற்கனவே பல இருக்கின்றன.இப்போது புதிதாக மேலும் ஒரு கேள்வி பதில் தளம் அறிமுகமாகியிருக்கிறது.
ஆஸ்க் எ புக் என்னும் அந்த தளம் மற்ற கேள்வி பதில் தளங்களை போல இருந்தாலும் பதில் அளிக்கும் விதத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது.
பொதுவாக கேள்வி பதில் தளங்களில் யாரேனும் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் அளிப்பார்கள்.ஆனால் இந்த தளத்தில் ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் நேரடியாக அளிக்கப்படாமல் அந்த பதில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் பெயர் பரிந்துரைக்கப்படுகிற‌து.
எந்த கேள்வி கேட்டாலும் சரி அந்த கேள்விக்கான பதில் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்னும் தகவல் முன் வைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஸ்டீவ் ஜாப்சின் தனிச்சிறப்பு என்ன என்று யாரேனும் கேட்டால் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான புத்தகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
கேள்விக்காக விடை லட்சக்கணக்கான புத்தகங்களில் கொட்டிக்கிடப்பதால் அவற்றை தேடுவதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள புதுமையான வழி என்பதோடு புதிய புத்தகங்களை தெரிந்து கொள்வதறகான வழியாகவும் இந்த தளம் அமைந்துள்ளது.
ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான புத்தகம் தெரிந்திருந்தாலும் அதனை பரிந்துரைக்கலாம்.
எல்லாமே ஆங்கில புத்தகங்கள் தான்.தமிழிலும் இதே போல ஒரு இணையதலளம் அமைக்கப்பட்டால் அற்புதமான தமிழ் புத்தகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
\
இணையதள முகவரி;http://www.askabook.com/

நீளமான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவும் தளம்


இந்த தளம் நீள‌மான கட்டுரைகளை நொடியில் படிக்க உதவுகிறது.
அதாவது நீளமான கட்டுரைகளை ஒரு சில வரிகளில் சுருக்கி தந்து விடுகிறது.அந்த சில வரிகளை படித்தால் போதும் கட்டுரையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு விடலாம்.
நீளமான கட்டுரையை படிக்க நேரமில்லாதவர்களுக்கான சேவை என்ற போதிலும் பத்து வரிக்கு மேல் எதையும் படிக்க பொருமை இல்லாதவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த இணையதளம் செயல்படும் விதமும் வேகமும் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.எந்த கட்டுரையின் சுருக்கம் தேவையோ அதனை இந்த தளத்தில் சமர்பித்து சுருக்கவும் என கேட்டுக்கொண்டால் அடுத்த சில நொடிகளில் அதன் சாரம்சத்தை முன் வைக்கிறது.

Tuesday, December 25, 2012

ஒலி நூலகம்


இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?
அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நூலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள்  உருவாக்கியவை.
விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.
இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்
ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.
ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.
ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.
அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளது அல்லவா?
————-
ஒலிகளை கேட்டு ம‌கிழ….

ஒரே வரியில் கதை சொல்ல ஒரு இணையதளம்


கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.காரணம் இந்த தளம் சவாலானதும் கூட.
உங்கள் கதையை அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கதையை சுவாரசியமாக சொல்ல முடியும் என்றால் அதை பதிவு செய்ய இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம். பொறுங்கள், நீங்கள் தளத்தை நோக்கி செல்வதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய நிபந்தனை ஒன்று இருக்கிறது.
நீங்கள் சொல்லப்போகும் கதை எதுவாக இருந்தாலும் அதை ஒரு வரியில் ஆம் ஒரே வரியில் சொல்லிவிட வேண்டும்.
அதுதான் இந்த தளத்தில் உள்ள சுவாரசியம். ஒரு வரியில் கதையை சொல்ல முடியும் என்று நம்புபவர்கள் தாராளமாக இந்த தளத்துக்கு செல்லலாம். முடியாது என்று நினைப்பவர்கள், மற்றவர்கள் ஒரு வரியில் எப்படி கதை சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம். எப்படிப்பார்த்தாலும் இந்த தளம் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.
வாழ்க்கையில் நாம் சொல்லும் எல்லா சிற‌ந்த கதைகளிலுமே சுவார‌ஸியாமான பகுதி என்று பார்த்தால் அது ஒரு வரியில் அடங்கி விடக்கூடியது தான் என்று இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
———-