DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, January 1, 2017

வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் ஆபத்து உள்ளதா?


பொதுவாக அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்கி தொழுவதற்கு, வீட்டில் நறுமணம் வீசுவதற்கும் ஊதுபத்தி ஏற்றும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகின்றது.
ஆனால் பல மலர்களின் வாசனைகள் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
http://ranjithcronje.blogspot.qa
எனவே ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஊதுபத்தியினால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்
வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நமது நுரையீரலில் அடைப்பௌ உண்டாக்கி, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுத்துகிறது.வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அழற்சிகளை ஏற்படுத்துகிறது.நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.

No comments:

Post a Comment