நம்மில் பலபேர்கள் நம்முடைய முகம் அழகாக பளிச்சென்று தெரிவதற்கும், முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் அதிக அளவில் சோப்பை பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் நாம் அப்படி பயன்படுத்தும் சோப்பானது, நமது சருமத்திற்கு பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே நாம் ஒரு நாளைக்கு குளிக்கும் நேரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில் சோப்பை அதிகமாக நமது சருமத்தில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சோப்பை ஏன் அதிகமாக பயன்படுத்தக் கூடாது?
நமது உடலை சுத்தம் செய்வதற்கு, பயன்படும் சோப்புக்களில் அதிக கெமிக்கல்கள் கலந்து உள்ளது. எனவே நுரை அதிகமாக வரும் சோப்புகளில் http://ranjithcronje.blogspot.qa கெமிக்கல்கள் அதிகமாக கலந்துள்ளது என்று அர்த்தமாகும்.நுரைகள் அதிகமாக வரும் கெமிக்கல் உள்ள சோப்பை நம் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சருமவறட்சியை ஏற்படுத்துகிறது.சோப்புக்களை அதிகமாக பயன்படுத்துவதால், சருமத்தில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களுடன், நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றது. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது.சோப்புக்களை முகத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தும் போது, நமது சருமத்திற்கு பாதுகாப்பு தரும் அடுக்குகள் அழிக்கப்பட்டு, சருமத்தினுள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நுழைந்து முகப்பருக்களை உண்டாக்கி, முதுமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பு
நமது சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிப்பதற்கு, தினமும் ஒரு நாளைக்கு அவ்வப்போது சாதாரண குளிர்ந்த நீரில் கழுவி வந்தாலே போதுமானது.
No comments:
Post a Comment