DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, January 7, 2017

கடல் அலைகள் தோன்றுவது ஏன்?



கடல் அலைகள், சாதாரணமானது இல்லை. மேலோட்டமா பார்ப்பதற்கு வேண்டுமானால் அலைகள், சாதாரணமாக தெரியலாம்.
கடல் அலைகள் தோன்றுவது, பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்பு சக்தியினால்தான். அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தான்! பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, கடலைப் பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.
நகர்ந்து கொண்டே, இடம்மாறிக் கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும், தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ‘இனர்ஷியா’ என்னும் உலகின் மாறா நிலைப்பு தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது http://ranjithcronje.blogspot.qa தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது அறிவியல்!
இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தை நிலவின் ஈர்ப்பு விசையின் திசையில் தொடர்ந்து நகரச் செய்யும் என்று கூறப்படுகிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே, கடல் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கி வரும்போது,  அடுத்து, பூமி, நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது என இருமுறை கடல் எழும்புகின்றன. இதனை அமெரிக்காவின் மசாச்சு செட்ஸ் நகர கடல் ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகின் புவியியல் அமைப்பு, அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில், இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்.  கொசுறா ஒரு 50 நிமிஷம் ஏன் என்று கேட்டால், பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது, நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth).
சூரியனும் அலைகளும்!
அலைகள் ஏன் ஓய்வதில்லை என்பதற்கு நிலவு மட்டுந்தான் காரணம் என்று கருதினால், நாங்களும் இருக்கிறோம் என்கிறது சூரியன். அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பெயர். ஆனால், நிலவினால் ஏற்படுகிற அலைகளைவிட, சூரிய அலைகள் சக்தி குறைந்தவை.
நிலவைவிட 27 மடங்கு சூரியன் பெரியது என்றாலும், நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறது சூரியன். அதனால், நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி, ஆற்றலில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறது என்று, தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூறுகிறது.

No comments:

Post a Comment