DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Sunday, January 1, 2017

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், தன் சிசு வளர உண்ண வேண்டிய உணவு முறைகள்

👇
கர்ப்பிணியாக உள்ள பெண்கள் தங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ உண்ண வேண்டிய உயிர்ச்சத்துள்ள உணவுகள்.
1. கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து)
*. பருப்பு
*. பட்டாணி
*. தானியத் தயாரிப்புகள்
*. சாக்லேட்.
2. கொழுப்புச்சத்து (மாவுப்பொருளை விட அதிகச் சத்து)
*. வைட்டமின் ‘எ’
*. வைட்டமின் ‘டி’
*. வைட்டமின் ‘இ’
*. வைட்டமின் ‘கே’
போன்ற சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.புரோட்டீன்கள்:
இது புரதச்சத்தாகும். குழந்தைகளின் திசு வளர்ச்சிக்கு புரோட்டீன்கள் என்ற புரதச்சத்து மிக பயன்படுகிறது.
4. வைட்டமின் ‘எ’:
- பச்சைக் காய்கறிகள்
- பழங்கள்
- வனஸ்பதி எண்ணெய்
- பால்
எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும், இரவில் பார்வை நன்றாகத் தெரிவதற்கும் இந்த ஊட்டச் சத்துக்கள் பயன்படுகிறது.

5. வைட்டமின் ‘டி’:
-முட்டையின் மஞ்சள் கரு
-ஈரல்
-குறிப்பிட்ட சில மீன்கள்
-சூரிய ஒளி
-இவைகள் குழந்தையின் எலும்பு உருவாக்கத்திற்கும், பல் முளைக்கவும் பயன்படும் ஊட்டச்சத்தாகும்.
6. வைட்டமின் ‘இ’:
-பச்சை நிறக் காய்கறிகள்
-கீரைகள்
-தானியங்கள்
-கொட்டைகள்
-மஞ்சள் கரு
இவைகள் குழந்தைக்கும், தாய்க்கும் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கவும், செல் சவ்வுகளின் ஒருங்கிணைப்பிற்கும் பயன்படும்.
7. வைட்டமின் ‘கே’:
-கீரைகள்
-காய்கறிகள்
-உருளைக்கிழங்கு
இவைகள் ரத்த விருத்திக்கும், ரத்த உறைவுக்கும் பயன்படுகிறது.
8. வைட்டமின் ‘பி’:
-பால்
-ரொட்டிகள்
-மொச்சை
-முட்டை
இவைகள் குழந்தையின் உரு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
இதில் இறைச்சி மட்டும் வைட்டமின் பி-12 சத்தாகும்.
9. போலிக் அமிலம்:
- பச்சைக் காய்கறிகள்
- கீரைகள்
- ஈரல்
- அவரை
- கொட்டைகள்
- தானியங்கள்
இவை தாயின் ரத்த அளவை அதிகரிக்கவும், குழந்தையின் நரம்புக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
http://ranjithcronje.blogspot.qa
10. வைட்டமின் ‘சி’:
-ஸ்ராபெரி
-அன்னாசி
-கொய்யா
-தக்காளி
-காய்கறி
இவைகள் எலும்பு, பற்கள் உறுதிக்குப் பயன்படுகிறது. மேலும் தொற்றுநோயை எதிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
11. கால்சியம்:
(கர்ப்ப காலத்தில் இறுதியில் மூன்றில் இரண்டு மடங்கு இது தேவை)
-பாலாடை
-முட்டை
-ஓட்ஸ்
-பால், காய்கறி
இவை எலும்பு, பல் உறுதிக்கும், இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தத் தேவை. இதில் ஒரு டம்ளர் பாலில் 1200 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
12. பாஸ்பரஸ்:
-முட்டை
-பாலாடை, பால்
-இறைச்சி
-காய்கறி
இவை உடலில் உள்ள செல் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
13. இரும்புச்சத்து:
-காய்கறிகள் -கொட்டைகள்
-கீரைகள் -உலர் திராட்சை
-வெல்லம் -முட்டை
-பட்டாணி -நண்டு
-பீன்ஸ்
இதோடு ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழச்சாறு.
இந்த வகை உணவுகள் முதல் 3 மாதத்திற்கும், இறுதி 3 மாதத்திற்கும் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவை. இவை குழந்தை , தாயின் எல்லா வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
14. அயோடின் சத்து:
-அயோடின் கலந்த உப்பைத் தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
15. துத்தநாகம்:
-பால்
-மீன்
-மஞ்சள்கரு
-புரதச்சத்து
-இவைகளைக் குறைவாக உண்டால் கருப்பையில் இருக்கும் குழந்தை குறை வளர்ச்சி பெறும், மேலும் அதன் வாழ்நாள் குறைந்து போகும். இதன் குறைபாட்டால் பிறவிக் குறை நேரும். நீண்ட நேர பிரசவ வலி ஏற்படும்.
16. நீர்ச்சத்து:
-தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
-பழச்சாறு சாப்பிடலாம்
-டீ, காபி தவிர்ப்பது நல்லது.
உணவு ஜீரணமாகவும், ஊட்டச்சத்து கடத்துவற்கும், கழிவுகள் வெளியேறவும், உடல் வெப்பம் குறையவும் இவை தேவைப்படுகிறது.
17. எடை கண்காணிப்பு:
-கருக்காலத்தில் உடல் எடையோடு 10 கிலோ, 12 கிலோவுக்கு மிகாமல் கர்ப்பிணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-தாயின் எடை உயராமல் இருந்தால், அது குறைப்பிரசவம் ஆகும்.
18. கர்ப்பகால உணவு முறைகள்:
1.தானியங்கள் -35 கிராம் தேவை -118 கலோரி
2.பருப்புகள் -15 கிராம் தேவை -52 கலோரி
3.பால் -100 கிராம் தேவை -83 கலோரி
4.கொழுப்பு -தேவை இல்லை
5.சக்கரை -10 கிராம் தேவை -40 கலோரி
மொத்தம் 293 கலோரி தேவை
19. 48 கிலோ எடையுள்ள ஒரு கர்ப்பமான பெண் ஒரு நாளில் உண்ண வேண்டிய உணவு முறை:
காலை 7 மணிக்கு – டீ ஒரு கப், பேரிச்சம்பழம், மேரி பிஸ்கட் 3 அல்லது ரஸ்க் ரொட்டி.
காலை 8.30 மணிக்கு – கஞ்சி ஒரு கோப்பை அல்லது 2 இட்லி, அல்லது 2 சப்பாத்தி, பாலாடைக்கட்டி 1 துண்டு அல்லது ஒரு முட்டை மற்றும் ஒரு டம்ளர் பால்.
காலை 11 மணிக்கு – முளைகட்டிய தானியம் 1 குவளை எவையேனும் ஒரு பழம்
மதியம் 1 மணிக்கு - சப்பாத்தி-3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 குவளை, பச்சைக் காய்கறி 1 குவளை, தயிறு 1 குவளை, சாலட்- சிறுதட்டு நிறைய
மாலை 4 மணிக்கு – கொஞ்சம் உப்புமா, பால் -1 டம்ளர்
இரவு 8.30 மணிக்கு - சப்பாத்தி – 3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 கரண்டி, பச்சைக் காய்கறி 1 கரண்டி, தயிர் ஒரு குவளை, மீன் அல்லது கோழிக்கறி ஒரு குவளை, சாலட் ஒரு தட்டு.
இரவு 9.30 மணிக்கு - பால் ஒரு டம்ளர்.
இவ்வாறான உணவுகளை கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எடுத்துக் கொண்டால் குழந்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதுடன் தாயும் நலமாக இருப்பாள் என்பதில் ஐயமில்லை.

1 comment:

  1. Very interesting, good job and thanks for sharing such a good blog. Your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job.Keep it up
    Things NieR: Automata Doesn't Tell You

    ReplyDelete