DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, November 25, 2016

யூபிஐ செயலி என்றால் என்ன..? மக்களுக்கு இதனால் என்ன பயன்?

👇
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன்(NPCI) யூனிபைட் கொடுப்பனவு இடைமுகம் (UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யூபிஐ என்பது செயலி மூலம் வங்கி பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதி ஆகும்.
எனவே நாம் யூபிஐ என்றால் என்ன மற்றும் இதன் மூலம் நாம் என்ன வங்கி சேவை எல்லாம் செய்ய இயலும் என்பதைப் பற்றி இங்குப் பார்ப்போம்?
யூபிஐ என்பது ஒரு பண பரிமாற்ற சேவை, இதன் வாயிலாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம்.
யூபிஐ வழியாக ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஐஎஃப்எஸ்சி குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவும் இல்லாமல் பண பரிவர்தனை செய்ய இயலும்.
ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாரதிய மகிளா வங்கி, கனரா வங்கி, கத்தோலிக்க சிரிய வங்கி, டிசிபி (DCB)வங்கி, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிஜேஎஸ்பி ஷாகாரி வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், கர்நாடகா வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் யெஸ் பேங்க் என 19 வங்கிகளும் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளன.
http://ranjithcronje.blogspot.qa
1. ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாாட்போன் வைத்திருக்க வேண்டும்.
2. பின்பு ப்ளேஸ்டோரிலிருந்து உங்கள் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாாட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
3. யுபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை உருவக்க வேண்டும்
4. இப்போது யுபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
5. பின் தனி அடையாளக் குறி (எம்-பின்) உருவாக்க வேண்டும்.
6. இதன் பிறகு யுபிஐ செயலி பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.
வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலை அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும்.
வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம்.
ஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம்.
ஏதேனும் பொருள் அல்லது சேவையை பெறும் போது வணிகர்களின் பயனர் குறியீட்டைப் பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்க செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும்.
பின்னர் பணத்தை செலுத்தவும் என்ற தெரிவை தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை எளிதாகச் செலுத்தலாம்.

No comments:

Post a Comment