DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Saturday, August 22, 2015

புதுமையான ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான இணையதளம்!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்வதற்காக என்று புதிய இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 'ஆண்ட்ராய்டு எக்ஸ்பெரிமென்ட்ஸ்' எனும் அந்த தளத்தில் என்ன ஹைலைட் என்றால் புதுமையான மற்றும் விநோதமான ஆண்ட்ராய்டு செயலிகளை மட்டும் இது அறிமுகம் செய்கிறது!

வழக்கமான செயலிகளையோ, வணிக நோக்கிலான செயலிகளையோ இதில் பார்க்க முடியாது. ஆங்ரிபேர்டுகளின் வாரிசு கேம்களும் கிடையாது. மாறாக படைப்பாற்றல் மிக்க முறையில் உருவாக்கப்பட்ட அசத்தலான செயலிகள் மட்டுமே இதில் பட்டியலிடப்படுகிறது. இந்த செயலிகளில் சில, கூகுள் குழுவால் உருவாக்கப்பட்டவை.


இப்போதைக்கு 20க்கும் அதிகமான செயலிகளே இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் தனித்து நிற்பவை. உதாரணம் வேண்டுமா? இங்க்ஸ்பேஸ் எனும் செயலி, வரைபட கருவி மூலம் நீங்கள் வரைந்த சித்திரங்களை உங்கள் சாதனத்தில் வேகமாணியை பயன்படுத்தி முப்பரிமாண தன்மையில் மாற்றித்தருகிறது.
லாண்ட் மார்கர் எனும் செயலி,  உங்கள் அருகே உள்ள நினைவுச் சின்னங்களை உலா வர உதவுகிறது. இப்படி இன்னும் பல புதுமையான செயலிகள் இருக்கின்றன. இந்த செயலிகள் எல்லாமே சோதனை முறையில் உருவாக்கப்பட்டவை. அவற்றை பரவலாக இணையவாசிகள் பார்வைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கூகுள் இந்த தளத்தை அமைத்துள்ளது.

செயலி பற்றிய அறிமுகம் மட்டும் அல்ல; அவை உருவாக்கப்பட்ட விதம் பற்றிய விவரங்கள் மற்றும் அவற்றின் பின்னே உள்ள நிரல்களும் கூட கொடுக்கப்பட்டுள்ளன. புரோகிராமில் வல்லவர் என்றால் நீங்களே கூட இவற்றை மேம்படுத்தலாம். எல்லாமே ஓபன் சோர்ஸ் கோட்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

அதே போல், புதிய செயலிகளை உருவாக்கிய சாப்ட்வேர் பிரம்மாக்கள் இதில் தங்கள் செயலிகளை சமர்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பார்த்து அலுத்துப்போயிருந்தால், இந்த தளத்திற்குள் எட்டிப்பாருங்கள்! ஸ்மார்ட்போன் செயலிகள் தவிர ஸ்மார்ட்வாட்ச்களுக்கான செயலிகளையும் இதில் காணலாம்.

இணையதள முகவரி: https://www.androidexperiments.com/

No comments:

Post a Comment