DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Friday, June 26, 2015

எந்த போன் வாங்கலாம்..?வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்னை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானதுதான்.

புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பலவற்றை பரிசீலித்தாக வேண்டும். இவற்றோடு வடி வமைப்பு, ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குழப்பத்தை தெளிவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களில் உங்கள் தேவைக்கு ஏற்ப எதை தேர்வு செய்யலாம்? என வழிகாட்டுவதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு இணையதளத்தில் 'விச் போன்' எனும் துணைத்தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணை யதளத்தில், ஆண்ட்ராய்டு பிரியர்கள் தங்கள் அடுத்த போனை தேர்வு செய்யலாம்.


இந்த தளம் எப்படி செயல்படுகிறது?

இந்த தளத்தில் நுழைந்ததுமே , நீங்கள் வாங்க இருக்கும் ஆண்ட்ராய்டு போன் எந்த வகை பயன்பாட்டிற்கானது என்பதை குறிப்பிட வேண்டும். புகைப்படங்கள் எடுக்க, இசை கேட்க, சமூக ஊடகங்களை பயன்படுத்த, இணையத்தில் உலாவ என்று பலவகையான பயன்பாடுகளும் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதில் உங்கள் தேவை என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.

இதே போல நீங்கள் அதிகம் விரும்பும் 3 பயன்பாடுகள் தொடர்பான தேவைகளை தெரிவித்தால், இந்த தளம் எந்த ஆண்ட்ராய்டு போன் சரியாக இருக்கும் என பரிந்துரைக்கிறது. இதன் பரிந்துரை எந்த அளவுக்கு துல்லி யமானது எனத்தெரியவில்லை. அது ஒவ்வொருவர் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறலாம். ஆனால் இந்த தளம் பயன்படுத்த சுவாரஸ்யமாக இருக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்ட்ராய்டு போன்களின் சிறப்பம்சங்களை சுலபமாக தெரிந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது. அதே போல எந்த வகையான பயன்பாட்டிற்கு, எந்த போன்கள் ஏற்றவை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு போன்களின் அம்சங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஒவ்வொரு இணையதளமாக அல்லாடிக் கொண்டிருக்காமல், ஒரே இணையதளத்தில் அவற்றை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதில் உள்ள செல்போன் நிறுவன சேவை தொடர்பான அம்சம் அமெரிக்கர்களுக்கானது என்றாலும், ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான பொதுவாக பல அம்சங்களை இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு போன் தொடர்பான ஆய்வுக்கு இதைவிட அருமையான தளம் இல்லை என்றும் சொல்லலாம்.

இணையதள முகவரி: https://www.android.com/phones/whichphone/#/

No comments:

Post a Comment