DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, July 24, 2012

பேஸ்புக் கணக்கை ஒரு ஐடியிருந்து வேறொரு ஈமெயில் மாற்றுவது எப்படி?




கூகுள் சேவைகளுக்கு அடுத்தப்படியாக வந்தேமாதரத்தில் அதிக இடுகைகள் இந்த பேஸ்புக் தளத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த அளவு பல்வேறு வசதிகள் சமூக இணையதளமான பேஸ்புக்கில் உள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியில் ஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் ஈமெயில் ஐடிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான ஈமெயில் அறிவிப்புகள் வருவதால் முக்கியமான ஈமெயில்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது உங்களின் பெர்சனல் ஈமெயில் தெரிந்து விடுவதால் அந்த ஐடியை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு ஈமெயில் ஐடிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். 

  • அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய ஈமெயில் ஐடியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 

  •  சரியாக கொடுத்து Save Changes என்ற பட்டனலை அழுத்தியவுடன் உங்களின் புதிய ஈமெயில் ஐடிக்கு Activation link செய்தி அனுப்ப பட்டதற்கான அறிவிப்பு வரும். 
  • உங்களின் ஈமெயில் ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய ஈமெயில் ஐடி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
  • மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய ஈமெயிலை தேர்வு செய்து பேஸ்புக் பாஸ்வேர்ட் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும். 

  • இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய ஈமெயில் அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே பாஸ்வேர்ட் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய ஈமெயில் ஐடி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.


இனி நீங்கள் புதிய ஈமெயிலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் ஈமெயில் ஐடியையும் பாதுகாக்கலாம்.
ranjithcronje

No comments:

Post a Comment